௨                                          Click here for English version

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் ஸஹாயம்

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் பங்குனி உத்தர ப்ரஹ்மோத்ஸவ வேத பாராயணம்

 
வேண்டுகோள்


புதுக்கோட்டை நகருக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தூரத்தில் குடுமியான்மலை எனும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருள் புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ சிகாகிரீஸ்வரர் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. மஹிமை தங்கிய இறைவன் ஸ்ரீ நிகேதாசலேஸ்வரர் எனவும் ஜயந்தவனேஸ்வரர் எனவும் சிகாகிரீஸ்வரர் எனவும் திருநாமம் பெற்று அகிலாண்டேஸ்வரி ஸமேதராய் இந்திரனால் பூஜிக்கப்பெற்று மகப்பேறு அடைந்த சிறப்புடையது இந்த ஸ்தலம். மேலும் அகஸ்தியர், ஹேமமகரிஷி, சுதீக்ஷ்ணர் முதலிய முனிவர்களாலும், இராவண ஸம்ஹார ப்ரஹ்மஹத்யாதி தோஷ நிவாரணமாக ஸுக்ரீவாதி ஹனுமத் ஸமேதரான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாலும் பூஜிக்கப் பெற்றது இத்தலம். ஸ்வேதகேது, நளன், காங்கேயன், மீனத்வஜன், சுந்தர பாண்டியன், பல்லவ மன்னர் முதலியவர்களால் நிர்மாணிக்கபட்ட ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், அணியொட்டிக்கால் மண்டபம், தசாவதாரம் முதலிய எழில் மிகு சிற்பங்கள், கல்வெட்டுகள், குடவரைக் கோயில் முதலியன பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை. மலை உச்சியில் விநாயகர், தண்டபாணி, அறுபத்துமூவர் மற்றும் கோயிலின் நுழை வாயிலில் வீரஹனுமார் தர்சனம் வரப்ரஸாதம். கோயிலில் உட்புறம் மூன்று தீர்த்தங்களும் வெளியில் ஆறு தீர்த்தங்களும் உள்ளன. இவைகள் மிகவும் புனிதமானவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிற்பங்களும் கல்வெட்டுக்களும் மண்டபங்களும் இந்திய தொல்பொருள் பாதுகாப்பு துறையினராலும் கோவில் பூஜை, திருவிழா முதலியன தமிழக அரசின் அறநிலையத் துறையாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
 

இத்தகைய பெருமைவாய்ந்த குடுமியான்மலை க்ஷேத்ரவாசியான தர்மக்ஞ ஸ்ரீ பஞ்சாபகேச தீக்ஷிதர் அவர்கள் பங்குனி உத்தர ப்ரஹ்மோத்ஸவத்தை ஒட்டி வம்ச பரம்பரையாக வேத பாராயணம் நடத்தி வந்தார். அவர் மஹா பெரியவரை போற்றி வேத பாத ஸ்தோத்ரம் (108 ஸ்லோகங்கள்) என்ற நூலை இயற்றி அவரின் வாழ் நாளில் சமர்ப்பணம் செய்தார். அவரின் நினைவாக K.A. பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட் (Regd. No. 76/2014) மூலம் நடத்தப்படும் குடுமியான்மலை பங்குனி உத்தர நூற்றி நான்கவது வருஷ [2019] லோக க்ஷேமார்த்தமான வேத பாராயண ஸந்தர்ப்பணை மற்றும் ஸமாராதனை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், ஸ்ரீ ச்ருங்கேரி ஜகத்குரு மஹாஸ்வாமிகள், ஆகியோரின் பரிபூரணமான அனுக்ரஹத்துடனும் ஆஸ்திக அன்பர்கள் ஆதரவுடனும் விளம்பி வருஷம் மாசி மாதம் 28ஆம் தேதி செவ்வாய் கிழமை முதல் பங்குனி மாதம் 7ஆம் தேதி வியாழக் கிழமை வரை ( 12/03/2019 - 21/03/2019 ) 10 நாட்கள் ஸ்ரீ லக்ஷ்மண கனபாடிகள் டிரஸ்டி & செயலாளர் [Cell 9444320464] தலைமையில் மிகச் சிறந்த முறையில் ஸ்ரீ கோபாலக்ருஷ்ண பாகவதர் பஜன் ஹால் ( G.A.Trust, Narasimha Jayanthi Namasankeerthana Mandapam) T.S. No. 2990, கீழ 3ஆம் வீதி புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.

नित्याय नित्योत्सव मङगलाय नीहारभानुस्फुट शेखराय।
त्रि्लोचनाय त्रिपुरान्तकाय शिखागिरीशाय नमश्शिवाय ।।
शिखागिरीश भामिनीं शिखरिमूल सञ्चारिणीं शिवाङ्ग सुखवासिनीं शिवकटाक्ष सन्दायिनीम् ।
शिवङ्करकरामुमां शिरसिदीप्त नानासुमां शिवामखिलदायिकां अखिलनायिकामाश्रये।।


வேதோகிலோதர்ம மூலம் வேதமே அறங்களின் ஆணிவேர் என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க மறையொலி எங்கும் முழங்கி அதன் மூலம் உலகம் இயற்கை உற்பாதங்களிலிருந்து விடுபட வேத பாராயணம் மிகவும் இன்றியமையாதது என்பது மறுக்க முடியாத சத்ய வாக்காகும். எல்லோரும் இன்புற்றுவாழ பலச்ருதிகள் அடங்கிய இந்த வேத பாராயணத் தொண்டிற்கு ஆஸ்திகோத்தமர்கள் அனைவரும் தொடர்ந்து நல்லாதரவு நல்கி இறை அருளை பெற்றுய்ய வேண்டுகிறோம். அது சமயம் வேதங்களின் பெருமை மற்றும் அவற்றால் விளையும் நற்பலன்கள் பற்றி வித்வான்களின் உபன்யாஸமும் நிகழும். குடுமியான்மலையில் சுவாமி கிரிவலம் 18/03/2019 [திங்கள்] அன்று நடைபெறும்.
 இங்ஙனம்
தலைவர் & டிரஸ்டிகள்
K.A. பஞ்சாபகேச தீக்ஷிதர் சாரிடபிள் டிரஸ்ட் (Regd. No. 76/2014)